லண்டனில் தீ: இறந்தவர்களை அடையாளம் காண்பதில் சிரமம்

லண்டன்: லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்ட டத்தில் மூண்ட தீயைத் தொடர்ந்து இன்னும் 65 பேரைக் காணவில்லை என்று சன் பத்திரிகைத் தகவல் தெரிவித் தது. அவர்கள் உயிரிழந்திருக் கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் பத்திரிகை தகவல் தெரிவித்தது. வடக்கு கென்சிங்டனில் உள்ள 24 மாடிக் கட்டடத்தில் புதன்கிழமை காலை மூண்ட தீயில் இதுவரை 30 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஐ தாண்டக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. எரிந்து சாம்பலான அக் கட்டடத்தினுள் மூன்றாவது நாளாக தேடும் பணி நேற்றும் தொடர்ந்தது. இனிமேலும் யாரையும் உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்ட நிலையில் சடலங்களைத் தேடும் பணி தொடர்வதாக போலிசார் கூறி யுள்ளனர். இந்நிலையில் தீயில் சிக்கி இறந்தவர்களை அடையாளம் காண முடியாமல் போகலாம் என போலிசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, தீ விபத்தில் உயிரிழந்த 6 பேர் அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்ட முதல் நபர் 23 வயது சிரியா அகதி முகம்மது அல்ஹஜலி என்று போலிசார் அறிவித்தனர். அடுத்தடுத்து மீட்கப்பட்ட சடலங்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகிய நிலையில் இருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

லண்டன் தீச்சம்பவம் அந்நகர மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ள வேளையில் அதுகுறித்த முழு விசாரணைக்கு பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே உத்தர விட்டுள்ளார். அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட திருவாட்டி மே, தீ விபத்தில் உயிர் பிழைத்த வர்களை சந்திக்காமல் சென்ற தற்காக அவரை பலர் குறை கூறியுள்ளனர். இதற்கிடையே லண்டனில் உள்ள மற்ற உயர் மாடிக் கட்டடங்களும் குடியிருப் பாளர்கள் வசிப்பதற்கு பாதுகாப் பானவையா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிலிப் கேட்டுக்கொண்டுள்ளார்.