இஸ்ரேலிய மாதினை கத்தியால் தாக்கிக் கொன்ற பாலஸ்தீனர்

ஜெருசலம்: இஸ்ரேலில் ஜெரு சலம் நகருக்கு அருகே வெள்ளிக்கிழமை மூன்று பாலஸ் தீனர்கள் தாக்குதல் நடத்திய தாகவும் அந்த மூவரையும் இஸ்ரேலியப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற தாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் சம்பவத்தில் இரு பாலஸ்தீனர்கள் போலிஸ் அதி காரிகளை நோக்கி துப்பாக்கி யால் சுட்டதாகவும் பின்னர் கத்தியால் தாக்க வந்ததாகவும் கூறப்பட்டது. மற்றொரு தாக்குதலில் எல்லை போலிஸ் அதிகாரியாக பணியாற்றிய இஸ்ரேலிய மாது ஒருவரை ஒரு பாலஸ்தீனர் கத்தியால் தாக்கிக் கொன்றதாக இஸ்ரேலியப் போலிசார் கூறினர். அந்த இஸ்ரேலிய மாது 23 வயது ஹடாஸ் மால்கா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரால் கொல் லப்பட்ட அந்த மூன்று பாலஸ் தீனர்களும் 18, 19 வயதுடைய வர்கள் என்று கூறப்பட்டது.