சுடச் சுடச் செய்திகள்

‘லண்டன் தீயில் வீடுகளை இழந்து தவிப்போருக்கு உடனடி உதவி தேவை’

லண்டன்: லண்டனில் உயரமான அடுக்குமாடி குடியிருப்புக் கட்ட டத்தில் மூண்ட தீயில் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடி உதவி தேவை என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செல்சி நகர மண்டபத்திற்கு வெளியே ஒன்றுகூடிய சுமார் சுமார் 60 பேர் டவுனிங் ஸ்திரீட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் தெருவில் உறங்குவதாகக் கூறிய பொதுமக்களில் ஒருவர், அரசாங்கம் மீது மக்கள் சினம் அடைந்துள்ளதாகக் கூறினார். இந்நிலையில் தீயில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு துணி, உணவு மற்றும் அவசர நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதற்கு 5 மில்லியன் பவுண்ட் நிதி வழங்க அனுமதி வழங்கினார். லண்டனில் சென்ற புதன் கிழமை 24 மாடிக் கட்டடத்தில் மூண்ட தீயில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ள நிலையில் இன்னும் 70 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் மூண்ட தீயைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி தேவை என்பதை வலியுறுத்தி அங்கு ஆர்ப் பாட்டம் நடந்தது. அப்போது ஆர்ப் பாட்டக்காரர்கள் இருவருக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon