பிரான்ஸ் தேர்தல்; மெக்ரோனுக்கு வெற்றி வாய்ப்பு

பாரிஸ்: பிரான்சில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது சுற்று வாக்குப் பதிவில் மக்கள் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் அதிபர் இம்மானுவெல் மெக்ரோனின் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஏழு மாத பிர சாரம், வாக்களிப்பு போன்ற வற்றால் மக்கள் சோர்வுற்று இருந்ததால் வாக்களிப்பும் மந்த மாகக் காணப்பட்டது என்று தக வல்கள் தெரிவிக்கின்றன. திரு மெக்ரோன் பல சீர் திருத்தங்களைச் செய்யப்போவ தாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்தச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற வேண்டும். ஒரு மாதத்துக்கு முன்புதான் முன்னாள் வங்கி அதிகாரியான 39 வயது மெக்ரோன் பிரான்ஸ் வரலாற்றில் முதல் முறையாக ஆக இளம் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். ஓராண்டுக்கு முன்புதான் அவர் புதிய கட்சியைத் தொடங்கி யிருந்தார். அவரது கட்சியைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்ட வேட்பாளர் களுக்கு அரசியல் அனுபவம் கிடையாது. இந்நிலையில் அவரது கட்சி நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று நாடாளு மன்றத் தேர்தலில் முன்னணி வகித்த வேட்பாளர்கள் நேற்று நடைபெற்ற 2வது சுற்றில் போட்டி யிட்டனர். மொத்தம் உள்ள 577 தொகுதிகளில் 289 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். திரு மெக்ரோனின் கட்சி 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன.