தென்கொரியாவின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர்

சோல்: தென்கொரிய அதிபர் மூன் ஜே நேற்று நாட்டின் முதல் பெண் வெளியுறவு அமைச்சரை நியமித்துள்ளார். வடகொரியாவின் அணுவாயுத நடவடிக்கைகள் தொடர் பில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் காங் கியூங் ஹுவா, வயது 62 என்பவரை அவர் வெளியுறவு அமைச் சராக நியமித்துள்ளார். இவர், ஐநாவில் மூத்த கொள்கை ஆலோசராக பணிபுரிந்துவந்தார்.