மலேசியாவில் இரு கொள்ளையர்களை சுட்டுக்கொன்ற போலிசார்

கோலாலம்பூர்: பண்டார் பாரு சென்டுலில் நேற்று போலி சாருடன் ஏற்பட்ட மோதலில் இரு ஆயுதக் கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிகாலை 3.30 மணியளவில் இரு கொள்ளையர்களும் இரு புரோட்டான் கார்களில் வெவ்வேறு வழிகளில் தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது அவர்களை போலிசார் மடக்கினர். அப்போது அவர்கள் சுட்டதால் போலிசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இருவரும் மாண்டனர் என்று போலிசார் கூறினர்.