லண்டன் தீ: அதிவேகமாக பரவியது குறித்து விசாரணை

லண்டன்: லண்டன் அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் 58 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப் படும் வேளையில் தீ அதிவேகமாக பரவியது குறித்து தீவிர விசா ரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் கட்டடம் முழுவதும் தீ பரவியது எப்படி என்பது ஆராயப்படும். இது குறித்து பேசிய நகராட்சி மன்றத்தின் தலைவர் நிக்கோலஸ் பேஜெட் புரவுன், பல சந்தேகங் களுக்கு விடை காணப்படும் என்றார். “கிரென்ஃபெல் டவர் கட்டட பேரிடர் குறித்த அரசாங்க விசார ணைக்கும் அல்லது எத்தகைய விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்,” என்றும் அவர் சொன்னார்.

இந்த நிலையில் இன்னமும் 58 பேர் காணவில்லை அல்லது இறந் திருக்கலாம் என்று அஞ்சப்படு கிறது. கட்டடத்தில் மீட்பு நடவடிக் கைகள் தொடங்கப்பட்டிருந்தாலும் முழுமை அடைவதற்கு பல வாரங் கள் ஆகலாம் என்று கூறப்படு கிறது. இதற்கிடையே விபத்தில் மாண்ட ஒருவரின் குடும்பத்தினர் சிரியாவிலிருந்து பிரிட்டன் வரு வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படு வதாக உள்துறை அலுவலகம் கூறியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon