சுடச் சுடச் செய்திகள்

போர்ச்சுகல் காட்டுத் தீ: 57 பேர் மரணம்

லிஸ்பன்: மத்திய போர்ச்சுகலில் மூண்டுள்ள பெரும் காட்டுத் தீக்கு குறைந்தது 57 பேர் மாண்டனர். இவர்களில் பெரும்பாலோர் பயணம் செய்த கார்களிலேயே கருகி மாண்டதாகவும் ஏராளமான வர்கள் காயம் அடைந்ததாகவும் போர்ச்சுகல் அரசாங்கம் நேற்று தெரிவித்தது. “அண்மைய ஆண்டுகளில் நிகழ்ந்த காட்டுத் தீச் சம்பவங் களிலேயே இது மிகவும் மோச மானது,” என்று அரசு குறிப் பிட்டது. சனிக்கிழமை மூண்ட காட்டுத் தீயை அணைக்க 160 வாகனங் களுடன் பல நூறு தீ அணைப் பாளர்கள் போராடினர். “பெட்ரோகாவோ கிரான்டேயில் பிற்பகலில் மூண்ட தீ மளமள வென்று பல பகுதிகளுக்கும் பர வியது.

இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்,” என்று பிரதமர் அன் டோனியோ கோஸ்டா கூறினார். சனிக்கிழமையிலிருந்து நில விய கடும் வெப்பத்தில் போர்ச் சுகல் கொதித்தது. பல வட்டாரங்களில் பருவநிலை 40 டிகிரி சென்டிகிரேட்டையும் தாண்டியது. அன்று இரவு நாடு முழுவதும் சுமார் 60 காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டன. இதனால் சுமார் 1,700 வீரர்கள் தீயை அணைப்பதில் ஈடு படுத்தப்பட்டனர். இதில் சாலைகளில் பயணம் செய்தபோது தீ சூழ்ந்ததால் 22 பேர் கார்களிலேயே கருகி மாண் டனர் என்று உள்துறை அமைச்சு கூறியது. மற்றவர்கள் புகையில் மூச்சுத் திணறி இறந்தனர். இதுவரை இரு தீ அணைப் பாளர்கள் உட்பட 16 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் இருவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அமைச்சு தெரிவித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon