‘லண்டன் பள்ளிவாசல் தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாத செயல்’

லண்டனில் பள்ளிவாசல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை, திட்டமிட்டுச் செய்யப்பட்ட பயங்கர வாதத் தாக்குதல் என்று போலிசார் வகைப்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா கூறியுள்ளார். நேற்று ஜூன் 19ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு 10 பேர் படுகாய மடைந்தனர். பிரிட்ட னில் உள்ள பெரிய பள்ளிவாசல் களில் ஒன்றாகக் கரு தப்படும் ஃபின்ஸ்பரி பார்க் பள்ளி வாசலில், முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானையொட்டி இரவு நேரத்தில் ஏராளமானோர் தொழுகை யில் கலந்துகொண்டு திரும்புகையில் கட்டுப்பாடின்றி வந்த வேன் ஒன்று அவர்கள் மீது மோதி யது. இந்தத் தாக்குத லை நடத்திய 48 வயது வேன் ஓட்டுநர், அங் கிருந்தவர் களால் வளைத் துப் பிடிக் கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

“தொழுகை முடித்துவிட்டு ஃபின்ஸ்பரி பள்ளிவாசலை விட்டு வெளியேறிய மக்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தரையில் விழுந்த ஒருவருக்கு சிலர் உதவிசெய்ய முனைந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முஸ்லிம் மன்றத் தின் பொதுச்செயலாளர் மிக்தாத் வெர்சி கூறினார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் தெரேசா மே, “இந்தக் கொடூரமான தாக்குதலில் காயமடைந்தவர்களையும் அவர்க ளது குடும்பங்களைப் பற்றியுமே நான் கவலைப்படுகிறேன். இது குறித்து அதிகாரிகளுடன் அவ சரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று தெரி வித்தார்.

லண்டனில் ஃபின்ஸ்பரி பார்க் பள்ளிவாசலுக்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பலியானவருக்காக வழிபாடு செய்கின்றனர். படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon