சுடச் சுடச் செய்திகள்

துவாஸ் மேற்கு நீட்டிப்பு வழித்தடத்தில் சீரான ரயில் சேவை

சிங்கப்பூரில் ரயில் கட்டமைப்பில் புதிதாக சேவையாற்றத் தொடங்கி யிருக்கும் துவாஸ் மேற்கு நீட்டிப்பு வழித்தடத்தில் முதல் வார நாளான நேற்று திங்கட்கிழமை எல்லாம் சீராக நடந்தன. அந்த வழித்தடம் ஞாயிற்றுக் கிழமை செயல்படத் தொடங்கியது. துவாஸ் மேற்கு நீட்டிப்பு வழித்தடம் ஜூ கூன் எம்ஆர்டி நிலையத் திலிருந்து தொடங்குகிறது. புதிய வழித்தடத்தில் குல் சர்க்கிள், துவாஸ் கிரசெண்ட், துவாஸ் வெஸ்ட் ரோடு, துவாஸ் லிங்க் ஆகிய நான்கு புதிய எம்ஆர்டி நிலையங்கள் அமைந்து உள்ளன.

துவாஸ் மேற்கு வழித்தடத்தில் நேற்று ரயில்கள் தாமதமின்றி குறித்த நேரத்தில் நன்கு செயல்பட் டன. அந்தப் புதிய வழித்தடத் தின் நீளம் 7.5 கி.மீ. அது கிழக்கு=மேற்கு ரயில் வழித் தடத்தை துவாஸ் தொழிற்பேட்டை வரை நீட்டிக்கிறது. புதிய வழித்தடம் அன்றாடம் 100,000 பயணிகளுக்குச் சேவை யாற்றும் எனத் தெரிகிறது. துவாஸ் வட்டாரத்தில் பணியாற் றும் மக்களுக்கு அந்த வழித்தடம் மிகவும் வசதியாக இருக்கும். இந்த ஊழியர்கள் இது நாள் வரை தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் பேருந்துகளில் அல்லது பொது உள் பேருந்துச் சேவைகள் மூலம் தாங்கள் வேலை பார்க்கும் இடத் திற்குச் சென்று வந்தார்கள். ஜூ கூன் பேருந்துச் சந்திப்பு நிலையத்திலிருந்து பேருந்தைப் பிடித்து வேலைக்குச் சென்று வந்தவர்களில், ரிஜாவாய், 29, என்பவர் ஒருவர். இவர் நேற்று ரயிலில் துவாஸ் லிங்க் நிலையம் வரை சென்றார்.

“பேருந்தில் நான் வேலைக்குச் செல்ல பொதுவாக 30 நிமிடம் பிடிக்கும். இப்போது ரயிலில் 7 நிமிடங்களில் வந்துவிட்டேன்,” என்று ரிஜாவாய் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் ரயில் கட்டமைப்பில் புதிதாக சேவையாற்றத் தொடங்கி யிருக்கும் துவாஸ் மேற்கு நீட்டிப்பு வழித்தடத்தில் நேற்று ரயில்களில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. எல்லாம் சுமுகமாக இருந்தன. இந்த வழித்தடம் நாள் ஒன்றுக்கு 100,000 பயணிகளுக்குச் சேவையாற்றும் என்று தெரிகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon