பயங்கரவாத பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை: கூகல்

பயங்கரவாதம் தொடர்பான காணொளிகளை அகற்றும் வகையில் புதிய கொள்கைகளும் விதிமுறைகளும் வகுக்கப்படும் என்று கூகல் தெரிவித்துள் ளது. இணையத் தளங்கள் முழு வதும் தீவிரவாதம், பயங்கரவாதம் தொடர்பான காணொளி களை அடையாளம் காண தொழில்நுட்ப வசதிகள் அதிகம் பயன்படுத்தப்படும் என்றும் இத் தகைய தகவல்கள் பொது மக்களை சென்றடைவதைத் தடுக்க எச்சரிக்கைகள் இடம் பெறும் என்றும் கூகல் கூறியது. கடந்த சில ஆண்டுகளாக நாங்களும் மற்றவர்களும் கொள்கைகளுக்கு புறம்பான கருத்துகளை அடையாளம் கண்டுபிடித்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூகல் பொது வழக் கறிஞர் கென் வாக்கர் கூறினார். இதற்கிடையே இந்த விவ காரத்தில் நான்கு அம்ச நட வடிக்கைகளை கூகல் அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’