சூலு கடற்பகுதியில் மூன்று நாடுகளின் சுற்றுக் காவல்

டராகான்: மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் பயங்கர வாதத்துக்கு எதிராகப்போராடவும் கடல் தாண்டிய குற்றச் செயல் களை ஒடுக்கவும் கடலில் கூட்டு சுற்றுக் காவல் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கின்றன. வடக்கு கலிமந்தானில் உள்ள டராகான் தீவில் நேற்றுக்காலை சுற்றுக் காவல் பணி தொடங்கி வைக்கப்பட்டது. பிலிப்பீன்சில் உள்ள மராவி நகரில் பிலிப்பீன்ஸ் ராணுவப் படைக்கும் ஐஎஸ், மாட், அபு சயாஃப் போன்ற பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான போராளிகளுக்கும் இடையே நான்காவது வாரமாக மோதல் நீடிக்கும் வேளையில் மூன்று நாடுகளும் சுற்றுக் காவலில் இறங்கியிருக்கின்றன. டராகான் கடற்படை தளத்தில் நடைபெற்ற முத்தரப்பு கடலோர சுற்றுக்காவல் தொடக்க நிகழ்ச்சியில் இந்தோனீசிய தற்காப்பு அமைச்சர் ரியாமிசார்ட் ரியாகியுடு, மலேசிய தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதின் ஹுசைன், பிலிப் பீன்ஸ் தற்காப்பு அமைச்சர் டெல்ஃ பின் லோரென்சானா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் சிங்கப்பூர் சார்பில் தற் காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மானும் புருணை நாட்டின் சார்பில் அந்நாட்டின் துணைத் தற்காப்பு அமைச்சர் அப் துல் அஸிஸ் முஹமட் தாமிட்டும் கலந்துகொண்டனர். இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய மூன்று நாடு களும் எல்லையோர கடற்பகுதியில் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டு உள்ளதால் கூட்டு சுற்றுக் காவல் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தோனீசிய ராணுவம் தெரிவித்தது. இவ்வட்டார கடற்பகுதியில் வழக்கத்திற்கு மாறான கடற் கொள்ளை, கடத்தல், பயங்கரவாதம், எல்லைகளுக்கு இடையி லான குற்றச்செயல்கள் போன்ற சவால்களை வட்டார நாடுகள் எதிர்நோக்கியிருப்பதால் நிலைத் தன்மையை ஏற்படுத்த மூன்று நாடுகளின் சுற்றுக்காவல் நடவ டிக்கை தொடங்கப்பட்டது என்றும் அது கூறியது.