மலேசிய நெடுஞ்சாலையில் இறந்துகிடந்த குட்டி யானை

ஈப்போ: மலேசிய நெடுஞ்சாலை யில் குட்டி யானை ஒன்று பரி தாபமாக ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள் ளது. வாகனம் மோதி இந்த யானை மடிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது குறித்து பேசிய தேசிய பூங்கா அதிகாரி ஒருவர், “இத் தகைய சம்பவங்கள் மிகவும் அரிது,” என்று குறிப்பிட்டார். “வடகிழக்கு கிளந்தான் மாநிலத்தை மலேசியாவின் எஞ்சிய பகுதியுடன் இணைக் கும் கிழக்கு -மேற்கு நெடுஞ் சாலையை ஓட்டியுள்ள இயற்கை வாழ்விடங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் காட்டுப் பகுதிகளைவிட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது,” என்று சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நெடுஞ் சாலையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத் தியுள்ளனர். சென்ற வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி அளவில் கிரிக்-ஜெலி நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய இரண்டு வயது யானை இறந்துகிடந்ததை கோலாலம்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘MEME’ என்ற மலேசிய யானைகளின் வாழ்க்கைச் சூழல், நிர்வாக அமைப்பினர் கண்டுபிடித்தனர். சம்பவம் குறித்து பேசிய பேராக் வனவிலங்கு, தேசிய பூங்கா பிரிவின் இயக்குநர் லூ கியான் சியோங், “ஏற்கெனவே ‘நெடுஞ்சாலையில் யானைகள் கடந்து செல்லும் இடம்’ என்று வாகன மோட்டிகளை எச்சரிக்கும் அறிவிப்புப் பலகை களை நிறுவியிருக்கிறோம்,” என்றார். இந்த விவகாரத்தில் குறிப்பாக இரவு, அதிகாலை நேரத் தில் வாகனமோட்டிகள் கவன முடன் இருப்பது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.