போராளிகள் இலக்குகள் மீது பிலிப்பீன்ஸ் விமானங்கள் தொடர்ந்து குண்டுவீச்சு

மணிலா: பிலீப்பீன்சின் தென் பகுதியில் உள்ள மராவி நகரில் நீடிக்கும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் ராணுவம், அந்நகரில் உள்ள போராளிகளின் இலக்குகள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. போராளிகள் வசம் உள்ள பகுதியில் ராணுவ விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கி வரும் வேளையில் தரைப்படையினர் போராளிகளை எதிர்த்து கடுமை யாக சண்டையிட்டு வருகின்றனர். அந்நகரின் 90 விழுக்காடு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக ராணுவம் கூறுகிறது. எஞ்சியுள்ள பகுதியை மீட்க ராணுவம் போராடி வருகிறது. வரும் சனிக்கிழமைக்குள் மராவி நகரை முழுமையாகக் கைபற்றி சண்டையை முடிவுக்குக் கொண்டுவர ராணுவம் திட்ட மிட்டுள்ளதாக ராணுவப் பேச்சாளர் கூறினார்.

நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் மராவி நகரில் உள்ள போராளிகள் கூடுதல் வலிமை பெற்ற நிலையில் சண்டையிடக் கூடும் என்றும் பிலிப்பீன்ஸ் ராணுவம் அஞ்சுகிறது. அந்த சண்டையில் மற்ற குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் சேர்ந்துக் கொள்ளக்கூடும் என்று மராவி நகர குடியிருப்பாளர்கள் அஞ்சும் வேளையில் சில குழுக்களை தாங்கள் கண்காணித்து வருவ தாகவும் அவர்கள் சண்டையில் சேர்ந்துகொள்ள மாட்டார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் ராணுவப் பேச்சாளர் படில்லா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!