சுடச் சுடச் செய்திகள்

அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: சிரியா நாட்டு போர் விமானம் ஒன்று அமெரிக்க விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா அமெரிக்காவுக்குக் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் அமெரிக்க படையினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரியா அதிபர் ஆசாத்தின் ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரஷ்யா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தலைமை வகிக்கும் அனைத்துலக கூட்டணிப் படையின் விமானம் மேற்கு எல்லைப் பகுதியில் பறக்கும்போது அது ரஷ்ய விமான எதிர்ப்புப் பீரங்கிகளுக்கு இலக் காகக்கூடும் என்று அமெரிக்காவுக்கு ரஷ்ய தற்காப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுச் சண்டை நீடிக்கிறது. ஐஎஸ் போராளிகளுக்கு எதிராக கூட்டணிப் படை தாக்குதல் நடத்தி வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon