தலிபான் போராளிகள் தாக்குதல்: 8 ஆப்கான் வீரர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் மீது துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில் அந்த முகாமில் பணியாற்றிய ஆப்கான் வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல் கள் கூறின. ஆப்கானிஸ்தானில் காபூலுக்கு அருகே பக்ராம் மாவட்டத்தில் ஆப்கான் வீரர்களுடன் சேர்ந்து அமெரிக்க ராணுவப் படையினர் முகாம் அமைத்து செயலாற்றி வருகின்றனர். ராணுவ முகாமில் பணி யாற்றுவதற்காக சென்றுகொண் டிருந்த ஆப்கான் வீரர்களை போராளிகள் பதுங்கியிருந்து தாக்கியதாகவும் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் மாவட்ட ஆளுநர் அப்துல் ஷகூர் கூறினார். தாக்குதலில் கொல்லப் பட்ட அனைவரும் உள்ளூர் வீரர் கள் என்றும் அவர்கள் பக்ராம் முகாமில் காவலர்களாக பணி யாற்றியவர்கள் என்றும் அவர் சொன்னார். அத்தாக்குதலுக்கு தலிபான் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ஆப்கானில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தலிபான் போராளிகள் தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அந்நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தலிபான் போராளிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தான் ராணுவத் துடன் அமெரிக்கப் படையினரும் இணைந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon