சுடச் சுடச் செய்திகள்

‘வடகொரியாவின் ஆளில்லா விமானம்தான் அது’

சோல்: இம்மாதத் தொடக்கத் தில் இரு கொரியாக்களின் எல்லைக்கு அருகே உள்ள ஒரு மலைப் பகுதியில் காணப்பட்ட ஒரு விமானம் வடகொரியாவின் ஆளில்லா விமானம்தான் என்பதை தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த ஆளில்லா விமானம் வடகொரியாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக் குள்ளானதாகக் கூறப்பட்டது. மலைப்பகுதியில் காணப் பட்ட அந்த விமானத்தில் கேமரா பொருத்தப்பட்டிருந்ததாகவும் தென்கொரியாவில் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் பொருத்தப்பட்ட இடத்தைக் காட்டும் புகைப்படங் கள் கேமராவில் பதிவாகியிருந்ததாகவும் தென்கொரிய அதி காரிகள் கூறினர். தென்கொரிய வான்வெளிக்குள் வடகொரியாவின் ஆளில்லா விமானங்களின் ஊடுருவல் அனைத்துலக விதிமுறையை மீறிய செயல் என்றும் இத்தகைய செயலை வடகொரியா நிறுத்த வேண்டும் என்றும் தென்கொரிய அதிகாரி கள் வலியுறுத்தினர்.

இரு கொரியாக்களின் எல்லைக்கு அருகே இம்மாதத் தொடக்கத்தில் விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் ஒன்று ஒரு மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானம் வடகொரியாவின் ஆளில்லா விமானம்தான் என்று உறுதிப்படுத்திய தென்கொரிய அதிகாரிகள் அந்த விமானத்தை ஊடகத் துறையினர் பார்ப்பதற்காக காட்சிக்கு வைத்துள்ளனர். படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon