இந்தோனீசியாவில் பலத்த போலிஸ் பாதுகாப்பு

ஜகார்த்தா: நோன்புப் பெருநாளைக் கொண்டாட மில்லியன் கணக் கான இந்தோனீசிய மக்கள் ஆயத்தமாகி வரும் வேளையில் இத்தகைய விழா காலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக இந்தோனீசியப் போலிசார் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்தோனீசியப் போலிசார் அண்மையில் பயங்கரவாத கட்டமைப்பு ஒன்றுடன் தொடர் புடைய 36 இந்தோனீசியர்களை சுற்றிவளைத்துப் பிடித்தனர். கிழக்கு ஜகார்த்தாவில் கம்போங் மலாயு பகுதியில் உள்ள பேருந்து முனையத்தில் சென்ற மாதம் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்கு தலைத் தொடர்ந்து அவர்களை போலிசார் கைது செய்தனர்.

அவ்விரு குண்டு வெடிப்பு களில் மூன்று போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். கம்போங் மலாயு குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்று தேசிய போலிஸ் படைத் தலைவர் டிட்டோ கனர்வியன் செய்தியாளர்களிடம் கூறினார். ஜகார்த்தாவில் உள்ள போலிஸ் தலைமையகத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய டிட்டோ, கம்போங் மலாயு குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் இந்தோனீசியாவில் உள்ள ஜேஏடி எனப்படும் ஜமா அன்ஷருட் டவ்லா பயங்கரவாத கட்டமைப்பின் ரகசிய குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வனவிலங்குகளைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டோனி டோஹெர்டி எனும் ஆஸ்திரேலியப் பெண்,  தீயில் கருகி காயமடைந்த ஒரு கோலா கரடியை தன்னலங்கருதாமல் காப்பாற்றியிருப்பது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. படம், காணொளி: ஊடகம்

21 Nov 2019

தாம் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி, கருகிக்கொண்டிருந்த கோலா கரடியைக் காப்பாற்றிய பெண்

ஹாங்காங் பலதுறைத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வெளியே கிடக்கும் கற்களை அப்புறப்படுத்தும் பணியாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Nov 2019

ஹாங்காங்: மாவட்ட நிர்வாக மன்றத்தின் தேர்தல் நடைபெற ஒத்துழையுங்கள்

புதிய அதிபராக பொறுப்பு ஏற்ற கோத்தபய ராஜபக்சேயை அவரது அலுவலகத்தில் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர். படம்: டாக்டர் ஜெய்சங்கர் டுவிட்டர்

21 Nov 2019

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே