சுடச் சுடச் செய்திகள்

சீனாவில் நிலச்சரிவு: 120 பேரைக் காணவில்லை

பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாநில மலைப்பகுதியில் நேற்று மண் மற்றும் பாறைகள் திடீரென சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் பலர் அதில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படு கிறது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ள நிலையில் நிலச்சரிவில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் 120க்கும் அதிக மானோரைக் காணவில்லை என்றும் மீட்புக் குழுவினர் தெரி வித்தனர். அவர்கள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மலைச் சரிவில் உள்ள ஜின்மோ என்ற கிராமத்தில் உள்ள 40 வீடுகள் மண்சரிவில் புதைந்தன. சரிந்துவிழுந்த பாறைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டவர் களைக் காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெரிய பாறை களை அகற்ற மீட்புக் குழுவினர் கயிறுகளைப் பயன்படுத்தி வருவ தாகவும் தகவல்கள் கூறுகின்றன. மண் சரிவில் சிக்கியிருந்த ஒரு தம்பதி மற்றும் ஒரு குழந்தை காப்பாற்றப்பட்டு மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப் பட்டிருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக அஞ்சப்படும் வேளையில் பாறைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon