லண்டனில் 5 உயர்மாடிக் கட்டடங்களில் தீ மூளும் அபாயம்

லண்டன்: லண்டனில் ஐந்து உயர் மாடிக் கட்டடங்களில் தீ மூளும் அபாயம் இருப்பதால் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக அந்த கட்டடங்களில் உள்ள 800 வீடுகளிலிருந்து சுமார் 4,000 பேர் வெளியேற்றப்பட்டனர். கேம்டென் எஸ்டேட் பகுதியில் உள்ள 5 அடுக்குமாடி குடி யிருப்புக் கட்டடங்களை சோதனை செய்த தீயணைப்புப் பிரிவு அதிகாரிகள், அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களின் பாது காப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறியதைத் தொடர்ந்து கேம்டென் மன்றம் இந்த நடவடிக்கையை எடுத் துள்ளது.

அந்தக் கட்டடங்களின் வெளிப்புறத்தில் பூசப்பட்டுள்ள அலங்கார ஓடுகள் எளிதில் தீ பிடிக்கும் வண்ணம் இருப்பதால் அவற்றை நீக்குதல், கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள எரிவாயு மற்றும் மின்சார இணைப்புகள் பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் தகுந்த பாதுகாப்போடு அவற்றைப் பொருத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மற்றும் முறையான தீத்தடுப்பு வழிகள் அவசர வழிகள் ஏற்படுத்தப்படும் எனவும் கேம்டென் மன்றம் தெரிவித் துள்ளது.

பாதுகாப்பு கருதி லண்டனில் கேம்டென் எஸ்டேட் கட்டடங்களிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next