மக்களோடு தொழுகையில் பங்கேற்ற சிரியா அதிபர் அசாத்

டமாஸ்கஸ்: சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத் நேற்று மத்திய ஹமாவில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டார். கடந்த ஓராண்டில் தலைநகருக்கு வெளியே அதிபர் காணப்படுவது இதுவே முதல் முறை. ஒளி வெள்ளத்தில் மிதந்த அல் நூரி பள்ளிவாசலில் நேற்று அதிகாலை வேளையில் நடைபெற்ற தொழுகையில் கலந்துகொள்ளச் அதிபர் சென்றபோது எடுத்த படங்களை அசாத்தின் அலுவலர் கள் வெளியிட்டுள்ளனர். அவரு டன் அமைச்சர்கள், அதிகாரிகள், முஸ்லிம் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோர் தொழுகையில் ஈடுபட்டனர்.

சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கிய 2011ஆம் ஆண்டுக் குப் பிறகு அதிபர் அசாத், ஹமா நகருக்கு முதல் முறையாகச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய செயல் என்று வருணிக்கப்படுகிறது. ரமலானை முன்னிட்டு சிரியா அரசாங்கம் தடுப்புக் காவலில் இருந்தவர்கள், அங்கிருந்தபோது பிறந்த அவர் களது பிள்ளைகள் என 670க்கு மேற்பட்டோரை விடுதலை செய் தது. சென்ற ஆண்டு நோன்புப் பெருநாளன்று ஹோம்ஸ் நகரில் நடைபெற்ற தொழுகையில் அதிபர் அசாத் கலந்துகொண்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon