கம்போடிய உள்ளாட்சி தேர்தல் முடிவு: எதிர்க்கட்சி முன்னேற்றம்

நோம்பென்: கம்போடியாவில் இந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பது கம்போடிய தேர்தல் அதிகாரிகள் நேற்று அறிவித்த முடிவுகளில் தெரியவந்துள்ளது. ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் இம்மாதம் நான்காம் தேதி வாக்களித்தனர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரதமாக இருந்துவரும் ஹுன் சென்னை தோற்கடிக்கும் நோக்கில் எதிர்க்கட்சியினர் தீவிரப் பிரசாரம் மேற்கொண் டிருந்தனர். நேற்று வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பின்படி மொத்தமுள்ள 1,646 தொகு திகளில் ஆளும் கட்சி 1,156 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் ஐந்தாண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி வென்ற 40 தொகுதிகளுடன் ஒப்பிடு கையில் இந்தத் தேர்தலில் அவர்கள் 10 மடங்கு இடங் களைப் பிடித்து முன்னேறி உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி 489 இடங்களில் வெற்றிபெற்றது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon