சுடச் சுடச் செய்திகள்

ஒரு பில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு

தென்கிழக்காசிய நாடுகளான மியன்மார், தாய்லாந்து, கம்போடியா ஆகிய மூன்று நாடுகளும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போதைப் பொருட்களை நேற்று அழித்துள்ளன. இந்த வட்டாரத்தில் போதைப் பொருள் அதிகரித் துள்ளநிலையில் போலிசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உலக போதைப் பொருள் ஒழிப்பு நாளை ஒட்டியும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மியன்மார், லாவோஸ், வட தாய்லாந்து, தென்சீனா ஆகியவற்றில் அதிக நடமாட்டமில்லாத எல்லைப் பகுதிகளில் சாதனை அளவில் போதைப் பொருட்கள் இந்த ஆண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, உலகில் அதிகளவில் போதைப் பொருள் தயாரிக்கும் நாடாக மியன்மார் விளங்குகிறது.

பல ஆண்டுகளாக அங்கு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள படைகளும் போராளிக் குழுக்களும் இந்த வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. பல விதமான போதைப் பொருட்களை தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஆயதம் தாங்கிய இக்கும்பல்கள் அனுப்பி வருகின்றன.

கம்போடிய தலைநகர் நோம் பென்னில் நேற்று போதைப் பொருட்களை எரிக்க ஆயத்தமான கம்போடிய அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon