சுடச் சுடச் செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு: ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், டுவிட்டர், யூடியூப் கைகோப்பு

இணையவழி பயங்கரவாத பிரசா ரத்தை முறியடிப்பதற்காக ஃபேஸ் புக், மைக்ரோசாஃப்ட், டுவிட்டர், யூடியூப் ஆகிய நான்கு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒன்றிணைந்து பயங்கரவாத எதிர்ப்புப் பங்காளித்துவத்தை அறிவித்துள்ளன. ‘பயங்கரவாத எதிர்ப்பு அனைத் துலக இணைய மன்றம்’ என்ற இயக்கத்தை நிறுவியுள்ள அந்த நிறுவனங்கள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகளுக்கு எதிரான வகையில் வாடிக்கையாளர்களுக் குத் தொடர்ந்து சேவையாற்று வதற்காக பொறியியல், ஆராய்ச்சி, அறிவைப் பகிர்ந்துகொள்ள இருப் பதாகத் தெரிவித்துள்ளன. அத்துடன், தங்களது தளங் களை அல்லது சேவைகளைப் பயன்படுத்தி தீவிரவாதக் கருத்து களைப் பரப்புவதைத் தடுப்பதில் அந்த நிறுவனங்கள் தனித்தனி யாகவும் செயல்பட்டு வருகின்றன.

“வேகமாகப் பரவி வரும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் மிக முக்கிய அனைத்துலகப் பிரச்சினையாகவும் நம் எல்லா ருக்குமான முக்கிய சவாலாகவும் உருவெடுத்துள்ளது,” என்று அந்த நிறுவனங்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. தங்களது சிறந்த தொழில் நுட்பத்தையும் செயல்பாடுகளையும் பகிர்ந்துகொண்டு ஒன்றிணைந்து செயல்படுவதன்மூலம், இணைய வழி பயங்கரவாதப் பிரசார மிரட் டல் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பு வதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

ஐரோப்பாவில் நடந்த கலந்துரை யாடல்கள், அண்மையில் ஜி7, ஐரோப்பிய மன்றக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவற் றின் அடிப்படையில் இந்தப் புதிய ‘பயங்கரவாத எதிர்ப்பு அனைத் துலக இணைய மன்றம்’ உருவாக் கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது. சிறிய தொழில்நுட்ப நிறுவனங் கள், குடிமைக் குழுக்கள், அர சாங்க அமைப்புகளுடனும் கல்வி யாளர்களுடனும் இணைந்து பணி ஆற்றவும் அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon