சுடச் சுடச் செய்திகள்

விழிப்பு நிலையில் மியன்மார் வீரர்கள்

யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை கருத்தில்கொண்டு அங்கு ராணுவ வீரர்கள் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருந்து வருவதாக அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ராக்கைன் மாநிலத்தில் நடக்கும் படுகொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பயந்து அங்கு வசிக்கும் பெளத்த சமயத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். ரோஹிங்யா தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் எல்லைக் காவல் சாவடிகளைத் தாக்கியதைத் தொடர்ந்து ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்தது.

அப்போது மூண்ட கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர்; பல வீடுகள் தீக்கிரையாகின. ரோஹிங்யா முஸ்லிம்கள் பலர் அருகில் உள்ள பங்களாதே‌ஷிற்கு தப்பிச் சென்றனர். இந்நிலையில் ராக்கைன் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதால் ராணுவ வீரர்கள் விழிப்பு நிலையில் இருந்து வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon