சுடச் சுடச் செய்திகள்

மராவியில் போராளிகளிடம் சிக்கியிருந்த 7 பேரை ராணுவம் பத்திரமாக மீட்டது

மராவி: பிலிப்பீன்சின் தென்பகுதி மராவி நகரில் போராளிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நீடிக்கும் வேளையில் போராளிகள் பிணை பிடித்து வைத்திருந்த 7 பேரை ராணுவம் பத்திரமாக மீட்டுள்ள தாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறினார். கடந்த மூன்று வாரங்களாக போராளிகளிடம் சிக்கியிருந்த அந்த 7 பேரும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார் மராவி நகரில் கடந்த மே 23ஆம் தேதி முதல் போராளி களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் இந்த சண்டையில் அரசாங்கப் படை தரப்பில் 70 வீரர்கள் உயிரிழந்த தாகக் கூறப்படுகிறது.

அத்துடன் சண்டையில் வெளிநாட்டுப் போராளிகள் உள்பட பயங்கரவாதிகள் 300 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் கூறியது. ஆயிரக்கணக்கான மக்கள் மராவி நகரிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் பலர் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். மராவி நகருக்குள் ஊடுரு விய போராளிகள் பாதிரியார் சுகனோப்பை பிணையாளியாகப் பிடித்து வைத்துள்ளனர். அவரை விடுவிக்க பயங்கரவாதிகள் ஒரு கோரிக்கையை முன்வைத் துள்ளனர். இந்த மாதத் தொடக்கத்தில் பிலிப்பீன்ஸ் அதி காரிகள் கைது செய்த மவுட் சகோதரர்களின் பெற்றோரை விடுவித்தால் தங்களிடம் சிக்கி யுள்ள பாதிரியார் சுகனோப்பை விடுவிக்க தாங்கள் தயாராக இருப்பதாக பயங்கரவாதிகள் கூறினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon