‘பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே நலமாக இருக்கிறார்’

மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே கடந்த ஒரு வார காலமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாததைத் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் எழுந்தன. இந்நிலையில் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 72 வயதாகும் டுட்டர்டேயின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக எழுந்த வதந்திகளைத் தொடர்ந்து அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் திரு டுட்டர்டே நலமாக இருப்பதாகவும் அவரது அலுவலகப் பணி காரணமாக அவரால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.