‘மராவியில் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம்’

மணிலா: பிலிப்பீன்சின் தென்பகுதி மராவி நகரில் போராளிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஐந்து வாரமாக நீடிக்கும் சண்டையில் அதிக எண்ணிக்கை யிலான மக்கள் கொல்லப்பட்டிருக் கலாம் என்று பிலிப்பீன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது. சண்டையில் மராவி குடியிருப் பாளர்களில் 27 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்நகரில் அதிக எண்ணிக்கை யிலான மக்கள் இறந்து கிடப்பதைப் பார்த்ததாக அங்கிருந்து தப்பி வந்த மக்கள் கூறியதாக ராணுவப் பேச்சாளர் படிலா கூறியுள்ளார். அவர்கள் கூறிய தகவல் உண்மையாக இருந்தால் சண்டை யில் பலியான மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவை எட்டியிருக்கக்கூடும் என்று அப்பேச்சாளர் சொன்னார்.

அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டதற்கு பயங் கரவாதிகளின் அட்டூழியச் செயல்களே காரணம் என்றும் அவர் கூறினார். வீடுகளில் பொருட்களை சூறையாடுதல், ஆயுதங்களை கையில் எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுமாறு மராவி நகர குடியிருப்பாளர்களை பயங்கர வாதிகள் கட்டாயப்படுத்தியதாக வும் ராணுவம் கூறியது. அங்குள்ள பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதாக வும் ராணுவம் தெரிவித்துள்ளது. மராவி நகரின் சில பகுதிகள் இன்னமும் போராளிகள் வசம் உள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போராளிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் போராளிகளின் வசம் உள்ள எஞ்சிய பகுதியை மீட்க ராணுவம் கடுமையாகச் சண்டையிட்டு வருகிறது. போராளிகளின் இலக்குகள் மீது ராணுவத்தினர் விமானத் தாக்குதல்களுடன் பீரங்கிக் குண்டு தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.

மராவி நகரில் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வரும் ராணுவ வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்