நியூயார்க் மருத்துவமனை துப்பாக்கிச்சூட்டில் மருத்துவர் பலி; பலர் காயம்

நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள புரோன்ஸ் லெபனான் மருத்துவ மனைக்குள் வெள்ளிக்கிழமை நுழைந்த ஒரு துப்பாக்கிக்காரன் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாகச் சுட்டதில் மருத்துவர் ஒருவர் கொல்லப் பட்டதாகவும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். அந்த மருத்துவமனைக் கட்டடத்தின் 16வது மற்றும் 17வது மாடியில் இருந்தவர்கள் மீது அந்தத் துப்பாக்கிக்காரன் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது. இதனால் அங்கிருந்த நோயாளிகளும் மருத்துவமனை ஊழியர்களும் பதற்றம் அடைந்த நிலையில் அங்கிருந்த அறை களில் மறைந்து கொண்டதாக மருத்துவமனைப் பணியாளர்கள் கூறினர். அந்தத் துப்பாக்கிக்காரன் அந்த மருத்துவமனையின் முன்னாள் மருத்துவரான ஹென்ரி பெல்லோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு ஹென்ரி பெல்லோ தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து கிடந்ததாக போலிசார் கூறினர்.

நியூயார்க் மருத்துவமனை துப்பாக்கிச்சூடு பற்றிய தகவல் அறிந்த போலிசார் அந்த மருத்துவமனையை சுற்றி வளைத்த நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் நிற்கின்றனர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஃபின்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள 34 வயது சானா மர்ரின். படம்: ராய்ட்டர்ஸ்

10 Dec 2019

ஃபின்லாந்தில் உலகின் ஆக இளம் வயது பிரதமர்

பாலினத்திற்கு எதிரான வன்முறை போராட்டத்தில் அதிகம் நாட்டம் கொண்ட 26 வயது தென்னாப்பிரிக்க நங்கையான சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தேர்வானார். படம்: ராய்ட்டர்ஸ்

10 Dec 2019

பிரபஞ்ச அழகியாக தேர்வான தென்னாப்பிரிக்க மங்கை