சுடச் சுடச் செய்திகள்

மலேசியா: கைது செய்யப்படும் சட்டவிரோத ஊழியர்கள்

கோலாலகம்பூர்: மலேசியாவில் சட்டவிரோதமாக வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை மலேசியா தீவிரப்படுத்தியுள்ளது. வேலை அனுமதிச் சீட்டு இல்லாமல் மலேசியாவில் பணி யாற்றும் வெளிநாட்டு ஊழியர் களைக் கைது செய்யும் நட வடிக்கையை மலேசிய குடி நுழைவுத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று ஜாலான் ஜேடி கிரி பகுதியில் வெளிநாட்டு ஊழியர் கள் தங்கும் விடுதியில் அதிகாரி கள் மேற்கொண்ட சோதனையில் 239 ஊழியர்கள் பிடிபட்டதாகவும் அவர்களில் 51 பேரிடம் செல்லு படியாகக் கூடிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் முஸ்தஃபார் அலி கூறினார்.

கைது செய்யப் பட்டவர்களில் பெரும்பாலானோர் பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த வர்கள் என்றும் அந்த இயக்குநர் சொன்னார். அவர்களில் பலர் அருகில் உள்ள மரச்சாமான் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற் சாலைகளில் வேலை செய்து வந்ததாகவும் அவர் சொன்னார். மலேசியாவில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர் களுக்காக அவர்களின் முதலாளி கள் இ-அட்டை விண்ணப்பிப் பதற்காக குடிநுழைவுத் துறை குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கியிருந்தது. அந்த காலக்கெடு வெள்ளிக் கிழமையுடன் முடிவுற்ற நிலையில் சட்டவிரோத ஊழியர்களுக்கு எதிராக மலேசிய அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon