சுடச் சுடச் செய்திகள்

ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்

ஹாங்காங்கில் ஐனநாயக ஆதரவாளர்கள் ஊர்வலமாகச் சென்றபோது அவர்களைப் பார்த்து மாணவர் தலைவர் ஜோஸ்ஹுவோ வோங் கை அசைக்கிறார். சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அங்கு பல கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற வேளையில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹாங்காங் மக்கள் வாக்களிப்பதற்கான உரிமைகளை வலியுறுத்தும் வகையில் நேற்றைய ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஆர்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட வேளையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரை போலிசார் கைது செய்தனர். படம்: ராய்ட்டர்ஸ்