கோரிக்கைகளை ஏற்க கத்தாருக்கு காலக்கெடு நீட்டிப்பு

துபாய்: பயங்கரவாதத்திற்கு கத்தார் துணை போவதாகக் கூறி சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நான்கு அர)பு நாடுகள் கத்தாருடனான உறவு களை துண்டித்துக் கொண்ட துடன் அந்நாட்டின் மீது பல தடைகளை விதித்துள்ளன. அந்தத் தடைகள் அகற்றப் படுவதற்கு அந்த நான்கு நாடுகள் சில கோரிக்கைகளை அறிவித்துள்ளன. அந்தக் கோரிக்கைகளை கத்தார் ஏற்பதற்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த காலக் கெடு மேலும் 48 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகள் ஆகியவை அறிவித்துள்ளன.

தடைகளை அகற்ற அரபு நாடுகள் விதித் துள்ள 13 கோரிக்கை களை ஏற்க கத்தார் மறுத்துவிட்ட நிலையில் தற்போது காலக்கெடு நீட் டிக்கப்பட்டுள்ளது. கத்தார் அதன் முடிவை இன்று தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப் படு கிறது. இப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் முயற்சியில் குவைத் மன்னர் ஈடுபட்டுள்ளார். நான்கு அரபு நாடு களுக்கும் கத்தாருக்கும் இடையே சமரசம் செய்யும் முயற்சியில் அவர் ஈடு பட்டுள்ளார்.