கட்டுமானப் பகுதிகளில் மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சோதனை

கோலாலம்பூர்: சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சோதனை களை தீவிரப்படுத்தியுள்ள நிலை யில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வெளிநாட்டு ஊழியர்கள் ஒளிந்துகொள்வதாக அதிகாரிகள் கூறினர். பல ஊழியர்கள் இவ்வாறு ஒளிந்துகொள்வதால் அவர்கள் வேலைக்கு வராமல் இருக்கக் கூடும் என்று முதலாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். மலேசியாவில் வேலை செய் யும் வெளிநாட்டு ஊழியர்களுக் காக அவர்களின் முதலாளிகள் இ-அட்டை விண்ணப்பிப்பதற்கு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் விதித்திருந்த காலக்கெடு முடி வுற்ற நிலையில் கடந்த மூன்று நாட்களாக கட்டுமானப் பகுதி களில் அதிகாரிகள் சோதனை களை மேற்கொண்டு வருகின் றனர்.

மலேசிய அதிகாரிகளின் கைது நடவடிக்கையால் கட்டுமான மற்றும் நடுத்தர, சிறிய நிறுவனங் கள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படு வதால் அங்கு வேலை செய் யும் வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு வர அஞ்சுவதாக முதலாளி ஒருவர் தெரிவித் துள்ளார். இதனால் தங்கள் நிறுவனத்தின் உற்பத்தி பாதிக் கப்படும் என்றும் அவர் சொன் னார்.

கிள்ளான், ஜாலான் காப்பார் பகுதியில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது வெளிநாட்டு ஊழிர்கள் காத்திருக்கின்றனர். படம்: தி ஸ்டார்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய முன்னாள் பேரரசர் சுல்தான் முகம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த ரிஹானா ஒக்சானா தம்பதியின் திருமண வாழ்க்கை ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. படம்: ரிஹானா/இன்ஸ்டகிராம்

21 Jul 2019

மலேசிய முன்னாள் பேரரசர், ரஷ்ய முன்னாள் அழகி தம்பதியின் விவாகரத்தை உறுதிசெய்த சிங்கப்பூர் வழக்கறிஞர்