சுடச் சுடச் செய்திகள்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சோல்: வடகொரியா மீண்டும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி யுள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீண்ட தொலைவு வரை சென்று தாக்கக்கூடிய ஆற்றல்மிக்க ஹவாசாங் என்ற ஏவுகணையை பாங்யான் என்ற இடத்திலிருந்து வடகொரியா நேற்று சோதனை செய்ததாகவும் அந்த ஏவுகணை சுமார் 930 கிலோ மீட்டர் வரை சென்று ஜப்பானிய கடல் பகுதியில் விழுந்ததாகவும் அமெரிக்க பசிபிக் தளபத்தியம் தெரிவித்தது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வடகொரி யாவின் மிரட்டல் அதிகரித்து வருவதை இந்த சோதனை தெளிவாக உணர்த்துகிறது என்று ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே கூறினார். உலக நாடுகளின் கண்டனங்களையும் மீறி வடகொரியா அண்மைய மாதங் களில் அடிக்கடி அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டிருப்பதால் வட்டார நாடுகளிடம் பதற்றம் அதிகரித் துள்ளது. இந்நிலையில் வடகொரியா, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்திருப்பதாகவும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இந்தப் பரி சோதனையை நேரில் பார்வையிட்ட தாகவும் வடகொரியா அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஏவுகணை சுமார் 2500 கிலோ மீட்டர் வரை சென்று இலக்கைத் தாக்கும் வலிமை கொண்டது என ஜப்பானைச் சேர்ந்த நிபுணர்கள் கணித்துள்ள னர்.