சிரியாவில் ராக்கா நகரைக் கைப்பற்றும் முயற்சியில் கிளர்ச்சிப் படையினர்

டமாஸ்கஸ்: சிரியாவில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள ராக்கா நகரைக் கைப்பற்ற அமெரிக்க ஆதரவு பெற்ற கிளர்ச்சிப் படை யினர் அந்நகரைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த பெரிய சுவரை உடைத்து உள்ளே நுழைந்திருப் பதாக அமெரிக்க ராணுவ தெரிவித்தது. சுவரைத் தகர்த்து சிரியா ஜனநாயகப் படையினர் அந் நகருக்குள் முன்னேறிச் செல்ல அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படை உதவி வருவ தாகவும் அமெரிக்க ராணுவம் கூறியது.

ராக்கா நகரைக் கைபபற்ற கிளர்ச்சிப் படை பல மாதங்களாக அந்நகரை சுற்றி வளைத்துள்ளது. ஐஎஸ் போராளிகள் 2014ஆம் ஆண்டு அந்நகரைக் கைப்பற் றினர். அரபு மற்றும் குர்திய வீரர்களின் கூட்டணிதான் சிரியா ஜனநாயகப் படை எனும் கிளர்ச்சிப் படை ஆகும். சென்ற வாரம் கிளர்ச்சிப் படையினர் ராக்கா நகரில் உள்ள ஐஎஸ் போராளிகளை சுற்றி வளைத்ததாகக் கூறப்படுகிறது. கிளர்ச்சிப் படையினருக் கும் ஐஎஸ் போராளிகளுக்கும் இடையே நீடிக்கும் சண்டையில் பொதுமக்களில் பலர் உயிரிழந்த தாக ஐநா தெரிவித்துள்ளது. அந்நகரில் இன்னமும் 100,000 பேர் சிக்கிக்கொண் டிருப்பதாக நம்பப்படுகிறது. மக்கள் அந்நகரிலிருந்து வெளியேறுவதை ஐஎஸ் போராளி கள் தடுத்து நிறுத்துவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Loading...
Load next