கோழிகளால் ஏற்பட்ட வாகன நெரிசல்

ஆஸ்திரியாவில் 7,000 கோழிகளை ஏற்றிச்சென்ற ஒரு லாரி அங்குள்ள ஒரு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அளவுக்கு அதிகமான பளு காரணமாக அந்த லாரியிலிருந்த பெட்டிகள் கீழே சரிந்தன. இதனால் அந்தப் பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கோழிகள் அந்த நெடுஞ்சாலையில் நாலா பக்கமும் சிதறி ஓடியதால் அங்கு போக்குவரத்து தடைபட்டது. வாகன நெரிசலும் ஏற்பட்டது. பெட்டிகள் கீழே விழுந்த வேகத்தில் பல கோழிகள் மடிந்தன. அவற்றையும் உயிருடன் உள்ள கோழிகளையும் திரும்பவும் பெட்டிக்குள் வைத்து அந்த லாரியில் ஏற்றுவதற்குள் தீயணைப்புப் படையினருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. படம்: ஏஎஃப்பி