கத்தாருக்குக் கெடு முடிந்தது; நான்கு நாடுகள் ஆலோசனை

ரியாத்: பயங்கரவாதத்துக்குத் துணை போவதாகக் கூறி கத் தாருக்குத் தடைகளை விதித்து அந்நாட்டுடனான உறவைத் துண் டித்துக் கொண்ட நான்கு நாடுகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கெய்ரோவில் ஒன்றுகூடுகின்றன. கத்தாருக்கு விதிக்கப்பட்ட கெடு முடிந்துள்ள நிலையில் பஹ் ரைன், எகிப்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கின்றனர். நிபந்தனைகள் அடங்கிய பட்டி யலை ஏற்றுக்கொள்ளாவிட்டால் மேலும் தடைகள் விதிக்கப்படும் என்று கத்தாரை நான்கு நாடுகள் எச்சரித்திருந்தன.

அல் ஜசிரா தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்துவது, ஈரானு டனான உறவை குறைத்துக் கொள்வது ஆகியவை நிபந்தனை களில் சில. ஆனால் நிபந்தனைகள் நியாய மற்றவை, அமல்படுத்த முடியாத வை என்று கத்தார் கூறியுள்ளது. தீவிரவாதத்தையும் பயங்கர வாதத்தையும் ஆதரிக்கும் கத்தார் இவ்வட்டார நிலைத்தன்மைக்கு பாதகங்களை ஏற்படுத்துவதாக நான்கு நாடுகளும் குற்றம் சாட்டி யுள்ளன. ஆனால் இதை கத்தார் மறுத்து வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு கத்தாருடன் அரச தந்திர உறவை முறித்துக்கொண்ட நான்கு நாடு களும் பொருளியல் தடைகளை விதித்தன.

இந்தத்தடையால் எண்ணெய் வளமிக்க கத்தாருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. சுமார் 2.7 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கத்தார் தங்களுடைய அடிப்படை தேவைகளுக்கு அக்கம் பக்க நாடுகளையே நம்பியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று அவகாசத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்த சவூதி அரே பியாவும் அதன் நட்பு நாடுகளும் உறவை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமெனில் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத் தியது. சென்ற செவ்வாய்க் கிழமை நான்கு நாடுகள் விதித்த நிபந்த னைகள் பற்றி கருத்து கூறிய “கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முஹமட், இந்த நிபந்த னைகள் பயங்கரவாதம் பற்றியவை அல்ல. மாறாக பேச்சுரிமையை அடக்குவது போன்றது,” என்றார். பயங்கரவாத அமைப்புகளுக்கு கத்தார் அடைக்கலம் வழங்குவ தோடு அலி ஜசீரா தொலைக்காட் சிக்கு நிதியுதவியும் செய்கிறது என்று நான்கு நாடுகளும் கூறி வருகின்றன.