தோக்கியோ விமான நிலையத்தில் அமெரிக்க மாது கைது

தோக்கியோ: தோக்கியோ விமான நிலையத்துக்கு வந்த அமெரிக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உண்மையான நூறு துப்பாக்கிக் குண்டுகளை அவர் குப்பைத் தொட்டியில் வீசிய தாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிகளுக்கும் வெடி பொருட்களுக்கும் கடும் கட்டுப் பாடுகள் உள்ள ஜப்பானில் இத் தகைய சம்பவம் மிகவும் அரிது என்பதால் இதனை பல உள்ளூர் பத்திரிகைகள் தலைப்புச் செய்தி களாக வெளியிட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை பிற் பகலில் தோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் துப்பாக்கிக் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன என்று தேசிய தொலைக்காட்சி ஒளிவழியான என்எச்கே தெரிவித்தது.

அமெரிக்காவிலிருந்து வந்த அமெரிக்க பெண் தோக் கியோ விமான நிலையத்தில் மற்றொரு விமானத்திற்காகக் காத்திருந்த போது கைது செய்யப்பட்டார். ஆனால் இது குறித்து ஜப் பானிய அதிகாரிகள் விவரங்கள் எதுவும் வெளியிடவில்லை. அமெரிக்காவில் தமது வீட்டிலிருந்து கிளம்பியபோது கைப்பையில் குண்டுகள் இருந் ததை அவர் மறந்துவிட்டார். இந்த நிலையில் தோக்கியோ விமான நிலையத்தில் தமது பையில் துப்பாக்கிக் குண்டுகள் இருப்பதை அறிந்த 60 வயது மதிக்கத்தக்க அமெரிக்க மாது குப்பைத் தொட்டியில் வீசிவிட முடிவு செய்தார்.

அமெரிக்காவிலிருந்து புறப் படும்போது அங்குள்ள விமான நிலையத்தில் அவரது பையில் குண்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்படவில்லை என்று அசாஹி ‌ஷிம்புன் குறிப்பிட்டது. கணவருடன் வந்த அவரிடம் ஜப்பானிய போலிசார் விசார ணை நடத்தி வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டில் இதே போன்ற சம்பவம் ஒன்றில் விளையாட்டு வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒக்கினாவா விமான நிலையத்துக்கு வந்த அவரிடம் துப்பாக்கிக்குண்டு ஒன்று இருந்தது. விசாரணையில் தம்முடைய நாட்டிலிருந்து வந்தபோது தமது பையில் குண்டு வைக்கப் பட்டதை மறந்துவிட்டதாக அவர் கூறியிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!