மலேசியாவில் 20 ஆண்டுகளுக்குப்பிறகு வெறிநாய்க்கடிக்கு இரு குழந்தைகள் பலி

கோலாலம்பூர்: மலேசியாவில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெறிநாய்க்கடிக்கு இரு குழந்தைகள் பலியாகியுள்ளன. மலேசியாவின் ஒரு பகுதியான போர்னியோ தீவில் நோய்த் தொற்றிய ஆறு வயது சிறுமியும் அவளுடைய நான்கு வயது சகோ தரரும் மரணமடைந்தனர் என்று நோய்க்கு எதிராக போராடி வரும் அதிகாரிகள் தெரிவித்தனர். வெறிநாய் கடித்ததால் அண்மை யில் நோய்த் தொற்றிய மூவரில் இந்த இரண்டு குழந்தைகளும் அடங்குவர் என்று அவர்கள் கூறினர்.

வெறிநாய்க்கடிப்பதால் இந் நோய்த் தொற்றுகிறது என்று சர வாக்கின் உள்ளூர் அரசாங்க, வீடமைப்பு அமைச்சர் சிம் குய் ஹியான் சொன்னார். “மூவரில் இருவர் இறந்து விட்டனர். இரு குழந்தைகளுக்கும் மூளைச்சாவு ஏற்பட்டதால் உயிர் காக்கும் மருத்துவ சாதனங்களை அகற்ற பெற்றோர் ஒப்புக் கொண் டனர்,” என்று அதிகாரிகள் குறிப் பிட்டனர். வெறிநாய்க்கடியால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபரின் உடல்நிலை மோசமாக உள்ளது. மலேசியாவின் சுகாதார இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம், “ஏறக்குறைய இருபது ஆண்டு களுக்குப்பிறகு வெறிநாய்க் கடிப் பதால் ஏற்படும் நோய்க்கு முதல் நபர் பலியாகியுள்ளார்,” என்றார்.

இந்தோனீசியாவின் போர் னியோ பகுதியை எல்லையாகக் கொண்ட சரவாக் மாநிலத்தின் செரியான் மாவட்டத்தில் ஐந்து கிராமங்கள் வெறிநாய்க்கடியால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டுள் ளன. இதையடுத்து செவ்வாய்க் கிழமை அன்று 12 கிராமங்களுக்கு சென்ற மருத்துவ குழுவினர், 6,000 பேரிடம் மருத்துவ சோதனை நடத்தினர். இதில் மூன்று பேர் வெறிநாய்க்கடி நோய்க்கு ஆளாகி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே கிராமங்களில் உள்ள அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போட உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டால் மூளை யிலும் முதுகுத்தண்டிலும் வீக்கம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள் உயிர்தப்புவது அரிது என்று கூறப்படுகிறது.

சரவாக்கில் நாய்களைப் பிடித்து தடுப்பூசி போடும் ஊழியர்கள். படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon