ஹாங்காங் சென்று சேர்ந்த சீனாவின் விமானந்தாங்கிக் கப்பல்

ஹாங்காங்: சீனாவின் விமானந்தாங்கி கப்பல் ஒன்று நேற்று ஹாங்காங் சென்று சேர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு சீனக் கப்பல் ஹாங்காங்கிற்கு அனுப்பப்பட்டது. சீனாவின் கடற்படை ஆற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் ஹாங்காங் மக்கள் பார்ப்பதற்காகவும் அக்கப்பல் ஹாங்காங் சென்றுள்ளது. அக்கப்பலை சுற்றிப்பார்க்க இலவச டிக்கெட் பெறுவதற்காக ஹாங்காங் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அக்கப்பலுடன் சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. சீன அதிபர் ஸி ஜின்பிங் முதன் முறையாக சென்ற வாரம் ஹாங்காங் சென்றிருந்தார். சீனாவுக்கு எதிரான எந்த ஒரு சவாலும் ஏற்புடையதல்ல என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். சீன அதிபர் ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு திரும்பிய மறுநாள் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தி பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading...
Load next