சுடச் சுடச் செய்திகள்

தென்சீனக் கடல் பகுதியில் பறந்த அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்

தோக்கியோ: அமெரிக்க அதிபர் டிரம்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங் கும் ஜெர்மனியில் நடக்கும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளும் வேளையில் அமெரிக்காவின் 2 குண்டுவீச்சு விமானங்கள் தென் சீனக் கடல் பகுதியில் பறந்து சென்றுள்ளன. தென்சீனக் கடல் பகுதி விவகாரம் தொடர்பில் இந்த வட்டாரத்தில் பதற்றம் அதிகரித் துள்ள வேளையில் அமெரிக்காவின் இரு விமானங்கள் அப்பகுதியில் பறந்துள்ளன. கிழக்கு சீனா கடல் பகுதியில் ஜப்பானுடன் கூட்டாக ராணுவப் பயற்சியில் ஈடுபட்ட அமெரிக்கா வின் இரண்டு பி-1பி லான்சர்ஸ் விமானங்கள் பயிற்சி முடிந்த பிறகு தென்சீனக் கடல் பகுதியில் பறந்து சென்றதாகவும் பின்னர் குவாமிலுள்ள அமெரிக்க விமானத் தளத்திற்கு திரும்பி வந்ததாகவும் அமெரிக்க விமானப் படை தெரிவித்தது.

இந்த பசிபிக் வட்டாரத்தில் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கை மற்றும் சினமூட்டும் செயலுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒற்றுமையை இந்த ராணுவப் பயிற்சி வெளிப்படுத்துவதாக அமெரிக்க தளபத்திய விமானப் படை வெளியிட்ட அறிக்கை தெரி வித்தது. தென்சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சீனா அதன் கோரிக்கைகளை வலுப்படுத்திக்கொள்ளும் வகை யில் அப்பகுதியில் பல நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. அதற்கு பிலிப்பீன்ஸ், வியட் னாம் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சீனா உரிமை கொண்டாடும் தீவுக்கு அருகே சென்ற வாரம் அமெரிக்காவின் 2 போர்க்கப்பல்கள் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon