ஜி20 மாநாட்டில் டிரம்ப்-புட்டின் சந்திப்பு

பெர்லின்: ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நேற்று தொடங்கிய ஜி20 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் புட்டினும் முதன்முறையாக சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின்போது அவ்விருவரும் கை குலுக்கிக் கொண்டதாகவும் அவ்விருவரும் பின்னர் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசவிருப்பதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகைப் பேச்சாளர் கூறினார். சிரியா மற்றும் உக்ரேன் விவகாரம், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரம் போன்ற காரணங்களால் அமெரிக் காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடை யிலான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரு தலைவர்களும் சந்தித்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டுள்ள இருதரப்பு உறவை மேம்படுத்த விரும்புவதாக இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். முன்னதாக போலந்து தலைநகர் வார்சாவில் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய திரு டிரம்ப், உக்ரேனிலும் மற்ற இடங்களிலும் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை யும் ஈரான், சிரியா ஆகிய நாடுகளுக்கு ஆதரவு அளிப் பதையும் ரஷ்யா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திரு டிரம்ப் கூறியிருந்தார்.

ஜெர்மனியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon