ஒருமித்த முடிவு எடுக்க ஜி20 தலைவர்கள் முயற்சி

பெர்லின்: ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்த ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்கள் ஒருமித்த முடிவை எடுப்பதில் நேற்று மிகுந்த சிரமப்பட்டனர். பாரிஸ் பருவநிலை உடன் பாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற மாதம் விலகிக்கொண்டதைத் தொடர்ந்து அது தொடர்பான முடிவை எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அத்துடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்ததைத் தொடர்ந்து புதிய வர்த்தக உடன்பாடு காண்பது தொடர்பில் மற்ற நாடுகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் திரு டிரம்ப், வர்த்தக உடன்பாடுகளை ஒட்டு மொத்தமாக எதிர்க்கவில்லை என்றும் எந்த ஒரு வர்த்தக உடன்பாடும் அமெரிக்காவுக்கு நன்மை அளிப்பதாக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். இந்நிலையில் ஹம்பர்க் நகரில் ஒன்றுகூடிய ஜி20 நாடுகளின் தலைவர்கள் தடையற்ற வர்த்தகம் குறித்து முக்கியமாக விவாதித் தனர்.

இரண்டு நாட்கள் நடந்த அந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று கலந்துரையாடல் பேச்சுவார்த்தை மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது என்று ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறினார். அமெரிக்காவுடனான கருத்து வேறுபாடு மற்ற நாடுகளின் கடப்பாடுகளை பாதிக்காது என்று தாம் நம்புவதாகவும் திருவாட்டி மெர்க்கல் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon