சிரியாவில் சண்டை நிறுத்த உடன்பாடு; 3 நாடுகள் இணக்கம்

டமாஸ்கஸ்: சிரியாவில் சண்டை நிறுத்த உடன்பாட்டை நடப்புக்கு கொண்டுவர அமெரிக்கா, ரஷ்யா, ஜோர்தான் ஆகிய நாடுகள் இணக்கம் கண்டுள் ளன. சண்டை நிறுத்த உடன் பாட்டுக்கு சிரியா அரசாங்கமும் போராளிகள் தரப்பும் இணக்கம் தெரிவித்திருப்பதாக ஜோர்தான் தெரிவித்துள்ளது. ஹம்பர்க் நகரில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புட்டினும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து சண்டை நிறுத்த உடன்பாடு பற்றிய அறிவிப்பு வெளிவந் துள்ளது. சிரியாவில் இன்று முதல் சண்டை நிறுத்த உடன்பாடு நடப்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அரசாங்கப் படையினருக்கும் கிளர்ச்சித் தரப்பினருக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுச் சண்டை யில் 300,000 பேர் உயிரிழந்தனர். சண்டைக்குப் பயந்து 5.5 மில்லியன் பேர் சிரியாவை விட்டு வெளியேறியதாக ஐநா தெரிவித்துள்ளது. சிரியா அதிபர் ஆசாத்திற்கு ரஷ்யா ஆதரவு அளித்து வரும் நிலையில் கிளர்ச்சித் தரப் பினருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.