மோசுல் நகரம் முழுமையாக ஈராக் கட்டுப்பாட்டில் வரும்

ஈராக்கின் மோசுல் நகரம் அடுத்த சில மணி நேரங்களில் முழுமையாக ஈராக்கிய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் வரும் என்று ஈராக்கிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஐஎஸ் போராளிகள் வசம் இருந்த அந்நகரை மீட்க ஈராக்கியப் படையினர் பல மாதங்களாக கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். மோசுல் நகரின் பல பகுதிகள் கைப்பற்றப்பட்ட நிலையில் எஞ்சிய பகுதிகளும் அடுத்த சில மணி நேரங்களில் ஈராக்கியப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கூறினார். ஈராக்கிய படையினருக்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த சண்டையின்போது பல கட்டடங்களும் வீடுகளும் தரை மட்டமாகின. படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next