உறவை மேம்படுத்திக்கொள்ள டிரம்ப்-புட்டின் இணக்கம்

ஹம்பர்க்: ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் முதன் முறையாக சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் புட்டினும் கடந்த காலத்தில் நடந்ததை மறந்து இரு நாட்டு உறவை மேம்படுத்திக்கொள்ள இணக்கம் கண்டனர். அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்தும் அவ்விரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்து கொள்வது தொடர்பில் அவர்கள் கலந்து ஆலோசித்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் ஹம்பர்க் நகரில் செய்தியாளர்களிடம் கூறினார். இரண்டு மணி நேரம் நீடித்த அவர்களின் சந்திப்பு ஆக்ககரமான முறையில் அமைந்திருந்ததாகவும் அவர் கூறினார்.