மராவியில் ராணுவச் சட்டம் நீட்டிப்பு

மணிலா: பிலிப்பீன்சின் தென்பகுதி மராவி நகரில் தற்போது நடப்பில் இருக்கும் ராணுவச் சட்டத்தை இந்த ஆண்டு கடைசி வரையில் நீட்டிக்குமாறு நாடாளுமன்றத்தை பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே கேட்டுக்கொண்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு மராவி நகருக்குள் போராளிகள் ஊடுருவி யதைத் தொடர்ந்து அங்கு ராணுவச் சட்டம் நடப்பில் இருப்பதாக திரு டுட்டர்டே அறிவித்தார். மராவி நகரில் போராளிகளுக்கும் பிலிப்பீன்ஸ் ராணுவத் தினருக்கும் இடையே நீடித்த சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். அந்நகரை போராளி களிடமிருந்து ராணுவத்தினர் மீட்டுள்ள போதிலும் அங்கு பாதுகாப்பு நிலவரம் மேம்படவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு ராணுவச் சட்டத்தை நீடிப்பது குறித்து வரும் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு எடுப்பார்கள்.