மகாதீர்: பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு நான் தலைவர்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது, “எதிர்க்கட்சி கூட் டணிக்கு நான்தான் தலைவர்” என்று கூறியுள்ளார். “எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர்களில் நானும் ஒருவர். ஆனால் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு முக்கிய தலைவர் நான்தான் என்பது கட்சி முக்கிய உறுப்பினர்கள் ஒப்புக்கொண்ட விஷயம்,” என்று திரு மகாதீர் கூறினார். கோலாலம்பூரில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் திரு மகாதீர் இவ்வாறு கூறினார். சில நாட்களுக்கு முன்பு எதிர்க் கட்சிக் கட்டணித் தலைவராக திரு மகாதீர் நிய மிக்கப்பட்டார். கெஅடிலான் கட்சி ஆலோச கர் அன்வார் இப்ராகிம், கெஅடிலான் கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோரும் எதிர்க்கட்சி கூட்டணித் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கூட்டணித் தலைவர்கள் மூவருமே ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள்தான் என்று திரு மகாதீர் கூறினார். அதே சமயம் ஒரு நாட்டுக்கு மூன்று பிரதமர்கள் இருக்க முடியாது என்று கூறினார்.