சுடச் சுடச் செய்திகள்

தைவான்: உணவகத்தில் எரிவாயு வெடிப்பில் ஒருவர் பலி, 14 பேர் காயம்

தைப்பே: தைவானில் உள்ள ஓர் உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும் 14 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறின. காயம் அடைந்தவர்களில் சிலருக்கு கடுமையான தீப்புண் காயங்கள் ஏற்பட் டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் கூறின. ஒரு பெண்ணின் சடலம் ஒரு கழிவறையில் காணப்பட்டதாக செய்தி நிறுவனத் தகவல் ஒன்று கூறியது. எரிவாயு வெடிப்பில் அருகில் உள்ள ஃபெங் சியா பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் காயம் அடைந்ததாகக் கூறப் படுகிறது. அந்த உணவகத் தின் உரிமையாளரும் தீப்புண் காயங்களுக்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon