சுடச் சுடச் செய்திகள்

பிலிப்பீன்சில் கடத்தப்பட்ட சிங்கப்பூரர் மீட்பு

பிலிப்பீன்சில் கடத்தப்பட்ட சிங் கப்பூர் பெண்ணைக் கடத்தல்காரர் களிடம் இருந்து அந்நாட்டு அதி காரிகள் மீட்டனர். கடத்தல் கும்பலுடன் தொடர்பு உடைய 45 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். குடிநுழைவுத் துறை அதிகாரி களும் பிலிப்பீன்ஸ் தேசிய போலி சும் இணைந்து நேற்று முன்தினம் கடத்தல்காரர்களைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். அதன் விளைவாக வு யான் என்று அடை யாளம் காணப்பட்ட அந்த சிங்கப் பூரர் அவர்களிடம் இருந்து மீட்கப் பட்டார்.

மெட்ரோ மணிலா வட்டார நகரங்களில் ஒன்றான பாசாயில் உள்ள ஒரு சூதாட்டக்கூடத்தில் இருந்த வு யானை மூன்று ஆடவர் களும் ஒரு பெண்ணும் சேர்ந்து கடத்திச் சென்றனர். பின்னர் அங்குள்ள பேவியூ இன்டர்நேஷனல் கட்டடத்திற்கு அவரைக் கொண்டு சென்ற கடத் தல்காரர்கள், அவரை அடித்து உதைத்தனர். $246,000 பிணைத் தொகை கொடுத்தால்தான் விடு விப்போம் என்றும் அவர்கள் மிரட் டினர். அண்மைக் காலமாக பிலிப் பீன்சில் இடம்பெற்ற வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் கடத்தப்பட்ட சம்பவங்களுக்கு இந்த 45 பேர் கும்பலே காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

குடிநுழைவு அதிகாரிகள், போலிசாரின் கூட்டு அதிரடி நட வடிக்கையின் முதற்கட்டமாக 26 வெளிநாட்டவர்கள் சுற்றி வளைக் கப்பட்டனர். தங்களுக்கான குடி நுழைவு ஆவணங்களை அவர்கள் அளிக்கத் தவறினர் என்றும் தங்களைப் பற்றிய அடையாளங் களை வெளியிட அவர்கள் மறுத் ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தம்மைக் கடத்தியவர்களில் மூவரை வு யான் அடையாளம் காட்டினார். அவர்களில் இருவர் மலேசியர்கள்; இன்னொருவர் சீன நாட்டவர். அதைத் தொடர்ந்து இடம் பெற்ற நடவடிக்கையில் கடத்திப் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்ததாக நம்பப்படும் மேலும் 19 வெளிநாட்டவர்கள் பிடிபட்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon